top of page
HOW TO GET MUDRA LOAN

முத்ரா கடன்: ரூ.10 லட்சம் வரை எளிதில் கடன்; எப்படி விண்ணப்பிப்பது! - mudra loan online apply
Mudra loan apply: பிரதான் மந்திரி முத்ரா யோஜனா எனப்படும் முத்ரா கடன் வாயிலாக ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை குறைந்த வட்டியில் விரைவாக கடன் பெற முடியும்.

1200-675-22498070-thumbnail-16x9-how-to-get-mudra-loan.jpg

முத்ரா கடன் அல்லது முத்ரா லோன் என்பது பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (Pradhan Mantri Mudra Yojana - PMMY) என்பது சிறு குறு நிறுவனங்களுக்கு மலிவு விலையில் கடன் வழங்குவதற்கான இந்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். முத்ரா திட்டங்கள் நிறுவனங்களை முறையான நிதி அமைப்பிற்குள் கொண்டு வர அல்லது "நிதியற்றவர்களுக்கு நிதியளிக்க" வடிவமைக்கப்பட்டுள்ளன.


முத்ரா கடன் வழங்கும் வங்கிகள்:


பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா போன்ற 27 பொதுத் துறை வங்கிகள் முத்ரா கடன்களை வழங்குகின்றன.

அதேபோல், ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சிட்டி யூனியன் பேங்க் போன்ற 18 தனியார் வங்கிகளும் முத்ரா கடன்களை பயனாளிகளுக்கு கொடுக்கின்றன. இதுமட்டுமல்லாமல், பல மைக்ரோ நிதி சேவை நிறுவனங்கள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகளும் முத்ரா கடன்களுக்கான பங்களிப்பை நல்குகிறது.

 

எவ்வளவு கடன் கிடைக்கும்?

முத்ரா கடன் திட்டமானது தருண், கிஷோர், சிஷு என மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

முத்ரா கடன் தகுதி (Mudra Loan eligibility):

 

பெண்கள், தனியுரிம நிறுவனம், கூட்டு நிறுவனம் அல்லது வேறு எந்த நிறுவனம் உள்ளிட்ட எந்தவொரு தனிநபரும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (முத்ரா கடன் திட்டம்) கடன்களின் கீழ் தகுதியுள்ள விண்ணப்பதாரர் ஆவர்.

முத்ரா கடனின் நோக்கம் என்ன?

 

வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும், தனிநபர் வருவாயை பெருக்குவதற்கும் என்பனப் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக முத்ரா கடன் வழங்கப்படுகிறது.

முத்ரா கடன்கள் பெறப்படுவதற்கான முதன்மை காரணங்கள் பின்வருமாறு:

  • கடைக்காரர்கள், வர்த்தகர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பிற சேவை தொடர்பான நடவடிக்கைகளுக்கான தொழில் கடன்கள்.

  • சிறு வணிக நிறுவனங்களுக்கான உபகரண நிதி.

  • போக்குவரத்து வாகனங்களுக்கான கடன்கள்.

  • கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த பண்ணை அல்லாத வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் முத்ரா கடனுக்கு தகுதியுடையவை.

  • வணிக நோக்கங்களுக்காக டிராக்டர்கள் அல்லது இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் நபர்கள் முத்ரா கடனுக்கு தகுதியுடையவர்கள்.

 

முத்ரா கடன் வட்டி விகிதம் என்ன?

முத்ரா கடனுக்கான வட்டி விகிதம் விண்ணப்பதாரரின் சுயவிவரத்தால் தீர்மானிக்கப்படுகிறது. முத்ரா கடன்கள் பொது மற்றும் தனியார் துறைகளில் பல வங்கிகளில் இருந்து கிடைக்கின்றன. அனைத்து கடன் வழங்குநர்களும் சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார்கள்.

ஒரு விண்ணப்பதாரருக்கு கடன் வழங்கப்படும் இறுதி வட்டி விகிதம் கடனளிப்பவரால் தீர்மானிக்கப்படுகிறது. விண்ணப்பதாரரின் வணிகத் தேவைகளை முழுமையாக மதிப்பாய்வு செய்த பிறகு இது தீர்வு செய்யப்படுகிறது.

 

முத்ரா கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

T1.png
T2.png
22498070_udyamimitra.png

உத்யாமி மித்ரா இணையதள முகப்புத் திரை (Credits: UdyamiMitra)

  • முதலில் உத்யாமி மித்ரா இணையதளத்திற்கு (UdyamiMitra) செல்ல வேண்டும்.

  • இதைத் தொடர்ந்து பெயர், மின்னஞ்சல், தொடர்பு எண்ணை உள்ளிட வேண்டும்.

  • மொபைல் எண்ணிற்குக் கிடைக்கும் OTP-ஐ உள்ளிட்டு ஆன்லைன் விண்ணப்பத்திற்குள் நுழைய வேண்டும்.

  • தொடர்ந்து விண்ணப்பத்தை சமர்பித்த பின் அது பகுப்பாய்வு செய்யப்படும் வரைப் பொறுத்திருக்க வேண்டும்.

  • உங்களுக்கு தரப்படும் சமர்ப்பிப்பு எண் கொண்டு, விண்ணப்பத்தின் நிலையை இதே இணையதளத்தில் காணமுடியும்.

 

சரியான சான்றிதழ்கள் இருப்பின், விரைவில் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இல்லையென்றால் அதற்கான காரணத்தை விண்ணப்ப சமர்பிப்பு எண் வாயிலாக தெரிந்துகொள்ள முடியும்.

 

முத்ரா கடன் வழங்கும் அனைத்து வங்கிகளின் விவரங்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

Contact Us

64-A, 8th Street
Cross Cut Road
Gandhipuram

Coimbatore - 641 012.

Tamilnadu, INDIA

98422 64355 - P. Manoharan - Founder 
98422 49646 - H. Nasar - Hon. President
99449 34093 - K. Janakarajan - President
98430 16392 - J. Jamaludeen - Secretary
98940 48022 - R.A. Senthilkumar - Treasurer

Pay your subscription
BE A Member

Pay by UPI ID : sabarioffset@okicici
attach and send your receipts by Whatsapp

and get your Payment Receipt

Registered Number : 351/2015

© Drafted and Created by SG Graphics, 79047 93269

bottom of page